புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 ஜனவரி 2021 (09:44 IST)

மாஸ்டர் படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு – எப்போது தெரியுமா?

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் முதல் முறையாக இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியானது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படம் இந்தியில் படுதோல்வி என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வாரவிடுமுறை முடிந்துள்ள நிலையில் பல திரையரங்குகளில் மாஸ்டர் படத்தின் வசூல் குறைய ஆரம்பித்துள்ளது. ஆனாலும் மாஸ்டர் படத்துக்காக அதிக தொகை செலவு செய்துள்ளதால் மேற்கொண்டும் மாஸ்டர் படத்தையே ஓட்ட திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ள சன் தொலைக்காட்சி நிறுவனம், அந்த படத்தை வழக்கத்தை விட சீக்கிரமாகவே தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒளிபரப்ப உள்ளதாக சொல்ல்ப்படுகிறது.