வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (18:18 IST)

’பீஸ்ட்’ ரிலீஸ் அப்டேட்டை அறிவித்தது சன் பிக்சர்ஸ்!

’பீஸ்ட்’ ரிலீஸ் அப்டேட்டை அறிவித்தது சன் பிக்சர்ஸ்!
அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 13 என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. 
 
விஜய் ரசிகர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் திரைப்படம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளது.
 
மேலும் படத்தின் அட்டகாசமான ஸ்டில் ஒன்றையும் சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது
 
விஜய்யின் ஆக்ரோஷமான பார்வையுடன் கொண்ட இந்த புகைப்படத்தை பார்க்கும் போது விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது