செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (16:44 IST)

கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனத்துக்குப் படம் பண்ணுகிறாரா அஜித்?

நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய Hombale Films என்ற நிறுவனம் சுதா கொங்காரே இயக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இந்த அறிவிப்போடு வெளியாகவில்லை.

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது சூர்யாதான் என்று ரசிகர்கள் ஆருடம் சொல்லி வருகின்றனர். ஆனால் இப்போது வரை படத்தின் ஹீரோ யார் என்பதை தயாரிப்பு நிறுவனமோ இயக்குனரோ இன்னும் முடிவு செய்யவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அஜித் – சுதாகொங்கரா இணைந்து படம் பண்ணுவது குறித்து ஆலோசித்தனர் எனத் தகவல்கள் பரவின. அதனால் இதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.