திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2018 (22:17 IST)

ஸ்ட்ரைக் உறுதியான நிலையில் பிப்ரவரியை குறிவைக்கும் படங்கள்

மார்ச் 1 முதல் க்யூப் மற்றும் UFO-ஐ எதிர்த்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் அறிவித்துள்ளது. இதனால் மார்ச் 1 முதல் தமிழ் படங்களின் படப்பிடிப்பு எதுவும் நடக்காது, மேலும் தமிழ் படங்களின் வெளியீடு எதுவும் இருக்காது எனவும் கூறியுள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தலைமையில் நடைப்பெற்ற பொது கூட்டத்தில், திரையரங்குகளில் படங்களை டிஜிட்டல்   முறையில் ஒளிபரப்பும் க்யூப் மற்றும் UFO நிறுவனங்கள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதால், இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம்   அறிவித்துள்ளது. எற்கனவே 2017-ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகம், போராட்டம், வேலைநிறுத்தம், ஃபெப்ஸி(FEFSI) யூனியன்களுக்கிடையே பேச்சுவார்த்தை,  வரிவிதிப்பு என பல்வேறு சர்சைகளை சந்தித்தது, அதே போல இந்தாண்டும் தமிழ் சினிமா பல்வேறு சர்சைகளை சந்திக்கும் என தெரிகிறது.
 
மார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் கிடையாது, படப்பிடிப்புகள் நடக்காது என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்கள். பேச்சுவார்த்தைக்கு க்யூப் நிர்வாகிகள்  அழைத்ததையும் புறக்கணித்துவிட்டார்கள். எனவே ஸ்ட்ரைக் உறுதியாகி விட்டது. 
 
இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் வரிசை கட்டி நின்ற படங்கள் போட்டி காரணமாக மார்ச் மாதத்துக்கு தள்ளிப்போகின. மார்ச் மாதம் இரண்டு வாரங்களாவது  ஸ்ட்ரைக் நடக்கும் என்பதால், பிப்ரவரி 23 ஆம் தேதி ரிலீஸ் செய்தால் தொடர்ந்து மூன்று வாரங்களில் வசூலை அள்ளி விடலாம் என்று தயாரிப்பாளர்கள்  ப்ளான் போட்டு வருவதாக தெரிகிறது.