வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 16 செப்டம்பர் 2020 (16:23 IST)

துணிவுடன் நிமிர்ந்து நில்லுங்கள்…வாழ்க்கை அரவணைத்துக் கொள்ளும் செல்வராகவன் அட்வைஸ்

சமீபகாலமாக மாணவர்கள் நீட் எனும் நுழைவுத் தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்வது அதிகரித்து வருவதால் இதற்குத் தடை வேண்டும் எனப்ன் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை கொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கு எடுத்தது என்றாலும் அடுத்த நாள் அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் இயக்குநரும் நடிகர் தனுஷின் அண்ணனுமான செல்வராகவும் தனது டுவிட்டர் பக்கத்தில், என் அன்பு நண்பர்களே! அனுபவத்தில் சொல்கிறேன்.சத்தியம். தேர்வு என்பது முக்கியமாக இருக்கலாம்.ஆனால் முற்றுப் புள்ளி அல்ல.அதில் தோற்றாலும் வாழ்க்கை பல்லாயிரக்கணக்கான வாய்ப்புகளை உங்கள் பக்கம் அனுப்பிக் கொண்டே இருக்கும்! துணிவுடன் நிமிர்ந்து நில்லுங்கள்.வாழ்க்கை அரவணைத்துக் கொள்ளும் ! என்று பதிவிட்டுள்ளார்.