வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 ஜூலை 2019 (22:11 IST)

விஜய்சேதுபதி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இலங்கை தமிழர்கள்

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளிவந்து நேற்று இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவந்தது. இதனையடுத்து விஜய்சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் உலகெங்கிலும் உள்ள இலங்கை தமிழர்கள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
முத்தையா முரளிதரன் விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாகவும், இதனால் உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், இந்த நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழில் வெளிவந்தால் அந்த படத்தை புறக்கணிக்கவும் தயங்க மாட்டோம் என்றும் இலங்கை தமிழர்கள் தெரிவித்ததாக தெரிகிறது
 
இலங்கை தமிழர்களின் எதிர்ப்பு காரணமாக இந்த படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகுவாரா? அல்லது எதிர்ப்பை மீறி விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிப்பாரா? என்பது போகப்போகத்தான் தெரிய வரும். இலங்கை தமிழர்கள் ஒட்டுமொத்தமாக இந்த படத்தை புறக்கணித்தால் இந்த படத்தின் வெளிநாட்டு வசூலில் கடும் பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது