வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (11:43 IST)

விஜய்யைப் பற்றி கூறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஸ்ரீதேவி மகள் ஜான்வி!

பிரபல நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு பிறகு அவரது மகள் ஜான்வி சினிமாவில் அதிகம் பிரபலமாகியுள்ளார். அவர் தடாக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு படத்திற்கு செம்ம வரவேற்ப்பும்  கிடைத்துள்ளது.
ஜான்வியின் தந்தை போனி கபூரின் முதல் மனைவிக்கு அர்ஜூன், அன்சுலா என 2 பிள்ளைகள். இதில் மூத்த மகன் பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர். 
 
தன் அம்மா மோனாவை விவாகரத்து செய்து விட்டு ஶ்ரீதேவியை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டதால், அப்பா போனி கபூர் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார் அர்ஜூன். 
ஶ்ரீதேவியின் மரணம் இவர்களை இணைய வைத்திருக்கிறது. 
 
இந்நிலையில்  தற்போது,  அர்ஜூனும்,  ஜான்வியும் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும், காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். 
அப்போது, "ஒருநாள் தூங்கி எழும்போது ஒரு ஆண் நடிகராக நீங்கள் இருந்தால், எந்த நடிகராக இருக்க வேண்டும்" என்ற கேள்வியைக் கரண் கேட்க, அதற்கு சற்றும் யோசிக்காமல், 'விஜய் தேவரகொண்டா' என பதிலளித்திருக்கிறார் ஜான்வி.
 
மேலும், தொடர்ந்த ஜான்வி, விஜய் தேவரக்கொண்டாவாக மாறி, என்னுடன் நடிப்பேன் என்றார்.