செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 25 ஜூலை 2018 (21:38 IST)

தற்கொலையை தவிர வேறு வழியில்லை : ஸ்ரீரெட்டி கண்ணீர் பேட்டி

முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். 

 
அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். அதோடு, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முறையிடவும் அவர் முயன்று வருகிறார்.
 
ஆனால், அவர் திரைத்துறை பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும், அவர் மீது விபச்சார வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வாராகி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இந்நிலையில், பிரபல மலையாள தொலைக்காட்சி ஒன்றுகு அளித்த பேட்டியில் “மலையாள நடிகை ஒருவர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட போது ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு ஆதரவாக நின்றது. ஆனால், நான் தன்னந்தனியக போராடி வருகிறேன். என் பெற்றோர் கூட என் பக்கம் இல்லை. என்னை ஒரு விலைமாது போலவே தொடர்ந்து சித்தரித்து வருகின்றனர். எனக்கான நீதி கிடைக்காவில் தற்கொலை செய்து கொள்வதை தவிர எனக்கு வேறுவழியில்லை” என கண்ணீர் மல்க கூறினார்.