மீண்டும் தொடங்கும் சுல்தான் ஷூட்டிங்… விக்குக்கே இத்தனை லட்சம் செலவா?
நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது.
நடிகர் கார்த்தி ரெமோ படத்தின் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் "சுல்தான்" படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ‘சுல்தான் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் முடிவடைந்துள்ளன.
மீதமிருக்கும் படப்பிடிப்பை இப்போது நடத்த படக்குழு தயாராகியுள்ளது. அதனால் அதில் கார்த்தி கலந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆனால் அவர் பொன்னியின் செல்வன் படத்துக்காக நீளமாக தலைமுடி வளர்த்து வருகிறார். இதனால் அவர் சுல்தான் படத்தில் கெட் அப்பில் மாறுவதற்காக லண்டனில் இருந்து பிரத்யேகமான விக் ஒன்றை வரவழைக்க உள்ளதாம், படக்குழு. இந்த விக்கின் விலையே சுமார் 4 லட்சம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
Source வலைபேச்சு