செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 21 மே 2022 (13:36 IST)

SPB 75… மூத்த இசைக்கலைஞர்களோடு நடக்கும் கச்சேரி… வெளியான அறிவிப்பு!

மறைந்த மூத்த பாடலர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் 75 ஆவது பிறந்தநாள் வரும் ஜூன் 4 ஆம் தேதி வருகிறது.

தமிழின் முன்னணி பாடகரும் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவருமான எஸ் பி பாலசுப்ரமண்யம்  கடந்த 2020 ஆம்  கொரோனா பாதிப்பால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் தீரா துயரத்தை ஏற்படுத்தியது.

அவர் மறைந்து ஒரு ஆண்டுக்கும் மேலானாலும், அவ்வப்போது அவர் பற்றிய நினைவுகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜூன் 4 ஆம் தேதி அவரின் 75 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு மிகப்பிரம்மாண்டமான கச்சேரி ஒன்று நடக்க உள்ளது. இந்த கச்சேரியில் பாடகர்கள் எஸ் ஜானகி மற்றும் பி சுசீலா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். மற்றும் இசையமைப்பாளர் தேவாவும் கலந்துகொள்கிறார். இந்த கச்சேரி சம்மந்தமான அறிவிப்பை எஸ் பி பி சரண் வெளியிட்டுள்ளார்.