வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2024 (17:40 IST)

ஆர்ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஆர்ஜே பாலாஜி மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த சொர்க்கவாசல் படத்தின் ரிலீஸ் தேதியை சற்றுமுன் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழ் திரை உலகின் காமெடி நடிகராக இருந்த ஆர் ஜே பாலாஜி அதன் பின்னர் ஹீரோவாகவும் இயக்குனராகவும் மாறி உள்ளார் என்பதும் அடுத்ததாக அவர் சூர்யாவின் படத்தை இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த சொர்க்கவாசல் என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது. சிறையில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து விறுவிறுப்பான திரைக்கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ், கருணாஸ், சானியா ஐயப்பன், பாலாஜி சக்திவேல், அந்தோணி தாசன், ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சித்தாத் விஸ்வநாத் என்பவர் இயக்கி உள்ள இந்த படம் கிறிஸ்டோ சேவியர் இசையில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படம் நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சற்றுமுன் ஆர் ஜே பாலாஜி தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva