ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (16:20 IST)

சமந்தாவின் பயணம் அற்புதமானது: நிச்சயத்திற்கு பின் வைரலாகும் சோபிதா வீடியோ..!

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் நடந்த சில மணி நேரங்களில் சமந்தா குறித்து சோபிதா பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நாக சைதன்யா மற்றும் சமந்தா கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்த நிலையில் நடிகை சோபிதா துலிபாலா உடன், நாக சைதன்யா டேட்டிங்கில் இருந்தார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாரபூர்வமாக நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் சோபிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சமந்தா குறித்து கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் ’சமந்தாவின் பயணம் அற்புதமானது என்றும், அவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களை பார்த்தாலே அது உண்மை என தெரியும் என்றும் , அவருடைய படங்கள் அனைத்தும் சிறப்பானவை’ என்றும் கூறியுள்ளார்.

மேலும் நாக சைதன்யா  மிகவும் அமைதியானவர், நிதானம், கண்ணியம் உடையவர் அவருக்கு எனது பாராட்டுக்கள் என்று தெரிவித்திருந்தார். சோபிதா இந்த வீடியோவை வெளியிடும்போது நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் தம்பதிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva