திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (21:18 IST)

பஜ்ஜி மாஸ்டராக மாறிய பரோட்டா சூரி: வைரலாகும் வீடியோ

பஜ்ஜி மாஸ்டராக மாறிய பரோட்டா சூரி
சுசீந்திரன் இயக்கிய ’வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தில் புரோட்டா சூரி அறிமுகமானார் என்பது தெரிந்ததே. அந்த படத்தில் இடம்பெற்ற பரோட்டா காட்சி இன்றும் அனைவர் மனதிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புரோட்டா சூரி தற்போது பஜ்ஜி சூரியாக மாறிவிட்டார் என்றே கூறலாம்.
 
சசிகுமார் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் சூரி, படப்பிடிப்பின் இடைவெளியின்போது அங்கு பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்த சமையல்காரருக்கு உதவி செய்ய ஆரம்பித்து விட்டார். அந்த சமையல்காரர் பஜ்ஜியை எண்ணெயில் போட  அந்த பஜ்ஜியை ஒரு கரண்டியால் சூரி வெளியே எடுத்த காட்சி அனைவரையும் கவரும் வகையில் இருந்தது
 
இது குறித்த வீடியோவை நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து கூறியிருப்பதாவது: நீங்க ஷூட்டுக்கு கூப்பிடுங்க, இல்ல கூப்டாம போங்க ,நம்மளுக்கு பஜ்ஜி போட்டே ஆகணும்’ என்று அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது