விற்று தீர்ந்த விவேகம் பட டிக்கெட்டுகள்!

Sasikala| Last Updated: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (15:29 IST)
தமிழ் சினிமாவில் தற்போது அஜித்தின் விவேகம் படத்தை பற்றிய பேச்சுதான். படம் வெளியாவதற்கு முன்னரே மொத்தமாக ரூ. 119 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

 
படமும் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24ம் தேதி) வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த நிலையில் இப்படத்தை பார்த்த படக்குழு விநியோகஸ்தர்கள் பிரம்மித்து போனதாகவும் கண்டிப்பாக படம் நல்ல வசூல் செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
 
படம் ரிலீசாக இன்னமும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, இலங்கை உள்ளிட்ட பல இடங்களில் அஜித் ரசிகர்கள் `விவேகம்' படத்தை கொண்டாடி வருகின்றனர். இணைய முன்பதிவுக்கான டிக்கெட்டுகளும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. பல்வேறு திரையரங்குகளில் இணையதளம் மூலம் முன்பதிவு தொடங்கியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :