சமூக வலைதளங்களில் வைரலாகும் ஜல்லிக்கட்டு பாடல் - வீடியோ!
அமீர் இயக்கத்தில் உருவாகிவரும் "சந்தனத்தேவன்" திரைபடத்திலிருந்து ஜல்லிக்கட்டு பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுச்சிப் போராட்டம் நடந்து வரும் பரபரப்பான சூழலில், அமீர் இயக்கத்தில் ஆர்யா மற்றும் சத்யா நடிக்கும் 'சந்தனத்தேவன்' திரைபடத்திலிருந்து 'ஜல்லிக்கட்டு' பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதி, யுவன்ஷங்கர் ராஜா பின்னணி இசை அமைத்துள்ளார். ஜல்லிக்கட்டு பாடலை பாடகர்கள் கார்த்திக், செந்தில் தாஸ் ஆகியோர் பாடியுள்ளனர். தற்போதுள்ள போராட்ட சூழலில் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.