வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2019 (10:54 IST)

இதுவரைக்கும் 15 ஸ்கிரிப்ட் கேட்டுட்டேன்..ஆனா முடிவெடுக்கல... கீர்த்தி சுரேஷ் சொல்லும் சீக்ரெட்

நடிகையர் திலகம் படத்துக்குப் பின்னர் புதிய திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்துவதாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார். 

 
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழில் இது என்ன மாயமோ படம் மூலம் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழின் முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்த அவர் தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். கமர்ஷியல் ஹிட் படங்களில் நடித்து வந்த அவருக்கு நடிகை சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் புதிய பரிணாமத்தைக் கொடுத்தது. கீர்த்தி சுரேஷின் நடிப்பை அந்தப் படம் அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது. 
 
இந்தநிலையில் திரைத்துறை அனுபவம் மற்றும் பட வாய்ப்புகள் குறித்து மனம்திறந்துள்ள கீர்த்தி, `நடிகையர் திலகம் படம் எனது வாழ்க்கையை வெகுவாக மாற்றிவிட்டது என்றே கூறலாம். அந்தப் படத்துக்குப் பின்னர், இதுவரை 15 ஸ்கிரிப்டுகளைக் கேட்டுவிட்டேன். ஆனால், எது குறித்தும் முடிவெடுக்கவில்லை. காரணம், நடிகையர் திலகம் கொடுத்த எஃபெக்ட்தான். நல்ல ஸ்கோப் இருக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்யலாம் என முடிவெடுத்திருக்கிறேன். அதற்காக கமர்ஷியல் படங்களை ஒதுக்கப்போவதும் இல்லை. நடிகையாக எனக்கு நல்ல ஸ்கோப் இருக்கும் கமர்ஷியல் படங்களிலும் நான் நடிக்கத் தயார்’ என ஓப்பன் ஸ்டேட்மெண்ட் தட்டியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.