வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (13:38 IST)

திருமணத்திற்கு சினேகா - பிரசன்னா ஜோடி - வைரலாகும் புகைப்படம்!

நடிகை சினேகா பிரசன்னா ஜோடியின் காதல் கால புகைப்படம்!
 
தென்னிந்திய சினிமாவின் சிரிப்பழகி சினேகா கடந்த 2001 ம் ஆண்டு வெளியான "என்னவளே" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 
 
வசீகரா, ஆட்டோ கிராப் , பார்த்தாலே பரவசம், ஏப்ரல் மாதத்தில் , உன்னை நினைத்து , ஹரிதாஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். 
 
தமிழ் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக பேசப்பட்டார். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 
 
தற்போது ஒரு மகன் , மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்  சினேகா பிரசன்னா ஜோடி காதலித்த போது எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.