ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (18:38 IST)

"ரோடு சொல்லிடும் நாட்டோட லட்சனத்த" சிவப்பு மஞ்சள் பச்சை டீசர்!

பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி அடுத்ததாக இயக்கி வரும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை.இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் இருவரும் கதாநாயகர்களாக  ஆக்ஷன் கதைக்களத்தில் மிரட்டியுள்ளார். 


 
பைக் ரேஸ் கதையை மையக்கருவாக கொண்டுள்ள இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடிகர் சித்தார்த் போக்குவரத்து காவலராக அநியாயத்தை அதிரடியாக தட்டி கேட்கும் நேர்மையான அதிகாரியாகவும் நடித்துள்ளனர். 
 
புதிய இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து சற்றுமுன் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். 
 
இப்படத்தை  ஜூலை 5-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.