திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (10:16 IST)

நெஞ்சுக்கு நீதி டிரைலர் வெளியீடு: சிவகார்த்திகேயன் பேச்சைக் கேட்டு மேடையிலேயே அழுத அருண் ராஜா!

நெஞ்சுக்கு நீதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படம் சென்சார் செய்யப்பட்டு ‘UA’ சான்றிதழ் பெற்று உள்ள நிலையில் மே 20 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “நானும் அருணும் ஒன்றாகதான் கல்லூரியில் படித்தோம். நாங்கள் சீரியஸாக பேசிக்கொண்டதே இல்லை. ஆனால் இப்போது அவர் எடுக்கும் சீரியஸ் படங்களான கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களைப் பார்க்கும் ‘இவன் நம்மகூடதான் படிச்சானா’ என்று தோன்றுகிறது.

அவரின் மனைவி சிந்துவின் மறைவு அருணுக்கு பேரிழப்பு. இனிமேல் அருணுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு கைதட்டல்களிலும் பாராட்டுகளிலும் சிந்து இருப்பார்.” எனக் கூற, அதைக் கேட்ட அருண் ராஜா காமராஜா மேடையிலேயே கண்கலங்கினார்.