புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (20:02 IST)

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட அடுத்த சிங்கில் ரிலீஸ் !

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டாக்டர் படத்தின் so babyஎன்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இப்படத்தின் அடுத்த சிங்கில் இன்று 5 மணிக்கு வெளியாகுமெனப் படக்குழு நேற்று அறிவித்தது.

அதன்படி தற்போது வெளியாகுமென ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர். ஆனால் படக்குழு சொன்னபடி தற்போது பாடல் வெளியாகவில்லை.

இதுகுறித்து ரசிகர்கள் டா க்டர் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடன் கேள்வி எழுப்பினர். நடிகர் சிவகார்த்திகேயனும் இயக்குநர் நெல்சனிடம் கேள்வி கேட்டவே, அவர் நான் யாரிடம் கேட்க எனக் கூறினார்.

பின்னர் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், என் லக்கி நம்பர் 7 , அதனால்அதுக்குள்ள ரிலீஸ் பண்ணுங்க எனத் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இயக்குநர்நெல்சனுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

#SoBaby என்ற பாடல் இன்று இரவு 7 மணிக்குள் ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனம் உறுதி அளித்தது. அதன்படி டாக்டர் படத்தின் #SoBaby என்ற சிங்கில் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இப்பாடல் கீழே உள்ளது.