சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்த ''டி3'' பட ஃபர்ஸ்ட்லுக் !
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் பிரஜன் . இவர் நடிப்பில் உருவாகியுள்ள டி3 என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் பிரபலமானவர் பிரஜன். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் டி3. இப்படத்தில் பிரஜனுக்கு ஜோடியாக வித்யா நடித்துள்ளார்.
இப்படத்தின் போஸ்டரை நடிகர் சவகார்த்திகேயன் நேற்று வெளியிட்ட நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் போஸ்டரில் சிக்ஸ் பேக் உடற்கட்டில், பிரஜன் நிற்கும் காட்சியில் அவர் கையில் விலங்குள்ளது. மேலும், இப்படத்தின் போகஸ்டரில் சொல்லப்படாத கதை என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. எனவே இது புதிய கோணத்தில் இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் பிரஜனின் நடிப்பு இருக்கலாம் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.