செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 16 செப்டம்பர் 2020 (20:45 IST)

தீபாவளிக்கு ரிலீஸாகும் சிவகார்த்திகேயன் படம் !

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு ஐந்து மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும் இதனை அடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை அடுத்து பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படமும் இந்த பட்டியலில் சேர்ந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இருப்பினும் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகள் திறப்பது உறுதி செய்யப்பட்டால் ஓடிடி ரிலீஸ் முடிவிலிருந்து டாக்டர் பின்வாங்கும் என்றும் கூறப்படும் நிலையில் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிடும் நோக்கில் படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், ஷரத் கெல்கர் இஷா கோபிகர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். விஜய் கார்த்திக்கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

இப்படம் தீபாவளிக்கு ரிலீசானால் தீபாவளிக்கு ரிலீசாகும் சிவகார்த்திகேயனின் முதல் படம் இதுவென நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.