மாவீரன் படத்துக்கு சிக்கல் வரும்… சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை
சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படம் மிக விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா,வேலைக்காரன் ஆகிய படங்களின் தோல்வியும், அயலான் படம் ரிலீஸ் ஆகாததாலும் அவர் பெருத்த கடனுக்கு ஆளானார். இதனால் அவர் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போது ஒரு குறிப்பிட்ட தொகையை பைனான்சியர்களுக்குக் கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் ஆனது.
ஆனால் கடைசியாக அவரின் டான் மற்றும் பிரின்ஸ் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆன போது அவர் தொகையைக் கட்டவில்லை. அதற்கு காரணம் டான் படத்தை ரிலீஸ் செய்தது ரெட் ஜெயண்ட் மூவிஸ். பிரின்ஸ் படத்தை தயாரித்தது தெலுங்கு தயாரிப்பாளர். இதனால் இப்போது அவர் அடுத்து நடிக்கும் மாவீரன் படத்தின் ரிலீஸில் சிக்கல் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பைனான்ஸியர்கள் சமீபத்தில் இது சம்மந்தமாக சிவகார்த்திகேயனை சந்தித்து பேசி எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது.