திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (17:39 IST)

சிவகார்த்திகேயன் 21வது படத்தின் சூப்பர் டைட்டில்.. டீசர் வீடியோ ரிலீஸ்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தை இதுவரை எஸ்கே 21 என்று கூறிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் அமரன் என்று வைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த டைட்டிலுடன் கூடிய டீசர் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டீசரில் இருந்து இது காஷ்மீர் தீவிரவாதிகளின் கதை என்றும் காஷ்மீரில் உள்ள அப்பாவி பொதுமக்களை இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.

வழக்கமான சிவகார்த்திகேயன் படங்களில் இருக்கும் காமெடி இந்த படத்தில் சுத்தமாக இருக்காது என்றும் முழுக்க முழுக்க ஒரு சீரியசான படமாக இருக்கும் என்பது இந்த டீசரிலிருந்து தெரிய வருகிறது. இந்த படத்திற்கு அட்டகாசமாக ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது இந்த டீசரின் பின்னணி இசையில் இருந்தே தெரிகிறது.

Edited by Siva