சிவகார்த்திகேயன் இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா? ஆடி போன ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் சிவகார்திகேயன் தொலைக்காட்சி ஆங்கராக இருந்து பின்னர் ஹீரோவானார்.
இவர் டாப் ஹீரோக்கள் ரேஞ்சுக்கு பிரபலமாகி கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆகியுள்ளார். தற்போது மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் விஜய்யின் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
இதற்காக அவர் ரூ. 35 கோடி முதல் ரூ. 40 கோடி வரை சம்பளமாக கேட்டாராம். பின்னர் ரூ. 27 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.