சிவாஜி ரிலீஸாகி 15 ஆண்டுகள்… ரஜினியை சந்தித்த ஷங்கர் மகிழ்ச்சி… வைரல் புகைப்படம்!
ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம் சிவாஜி ரிலீஸாகி 15 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும், புராதண தயாரிப்பு நிறுவனமான AVM நிறுவனமும் இணைந்து உருவாக்கிய திரைப்படம் சிவாஜி. கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலீஸான சிவாஜி திரைப்படம் அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. அதன் பின்னர் ஷங்கரும் ரஜினிகாந்தும் இணைந்து எந்திரன் மற்றும் 2.0 ஆகிய பிரம்மாண்ட படங்களை உருவாக்கினார்கள்.
இந்நிலையில் சிவாஜி ரிலீஸாகி 15 ஆண்டுகளை தற்போது நிறைவு செய்துள்ளது. அதைக்கொண்டாடும் விதமாக AVM நிறுவனம் சமூகவலைதளப் பக்கத்தில் பல சுவாரஸ்யமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர, அது வைரலாகி வருகிறது.