விஜய்யின் 66 ஆவது படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவா? ஹெச் வினோத்தா?
விஜய்யின் 66 ஆவது திரைப்படத்தை இயக்க ஹெச் வினோத்தை பரிந்துரை செய்துள்ளாராம் சிறுத்தை சிவா.
மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி நேற்று முன் தினம் முதல் உலகமெங்கும் ரிலீஸாகியுள்ளாது. சமூகவலைதளமெங்கும் மாஸ்டர் கொண்டாட்டமாக இருக்கிறது. அதில் முதல் பாதி செம்மயாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக செல்வதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இரண்டு நாட்கள் ஆன நிலையில் இப்போது எதிர்மறை விமர்சனங்களும் வர ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் நீண்ட தாமதத்தால் தயாரிப்பாளர் லலித் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்காக அடுத்த படத்தை நடித்துக் கொடுக்க முடிவு செய்துள்ளார் விஜய். இந்த படத்தை இயக்க அவர் சிறுத்தை சிவாவை பரிந்துரை செய்தாராம். ஆனால் நீண்ட நாட்களாக சூர்யாவுக்காக ஒரு படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளதால் அதை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளாராம். அதனால் அந்த படவாய்ப்பை இயக்குனர் ஹெச் வினோத்துக்கு கொடுக்கும்படி லலித்குமாரிடம் பேசியுள்ளாராம்.