வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (17:35 IST)

இசைப் பள்ளிக்கு பாடகர் எஸ்.பி.பி பெயர் சூட்டி அரசு உத்தரவு....

சமீபத்தில் பிரபல பாடகர் எஸ்.பி.பி மறைந்தார். அவரது மறைவு திரைத்துறையினருக்குக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில், எஸ்.பி.பி பெயரில் விருது ஒன்று வழங்க வேண்டுமெனவும்,அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டுமென திரைத்துறையினரும் பிரபலங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், ஆந்திரமாநிலம் நெல்லூரில் பிறந்த எஸ்.பி.பியை கவுரவிக்கும் வகையில் நெல்லூரில் இயங்கிவரும் அரசு இசை மற்றும் நாட்டியப் பள்ளிக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இசை மற்றும் நாட்டியப் பள்ளி என்று பெயர் மாற்றம் செய்ய ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எஸ்பி.பியின் மகன் சரண் ஆந்திரஅரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.