சிங்கமும் சாமியும் ஒரே படத்திலா?

Last Updated: வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (16:07 IST)
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் இரண்டாம் பாகமாக சாமி ஸ்கொயர் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 
 
படம் ரிலீஸாக நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இயக்குனர் ஹரி பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் சிங்கமும், சாமியும் ஒரே படத்தில் இணைய வாய்ப்புள்ளதா? என கேட்கப்பட்டது. 
 
அதற்கு ஹரி பின்வருமாறு பதில் அளித்தார், சிங்கம் 3 படத்தில் ஒரு காட்சியில் துரைசிங்கம், ஆறுச்சாமி இருவரும் ஒரு இடத்தில் சந்தித்து பேசுவது போல கற்பனை செய்திருந்தேன். 
 
ஆனால் அது நிஜத்தில் நடப்பது சாத்தியமில்லை. ஏனெனில் இருவருமே மிகப்பெரிய ஸ்டார்கள். ஒரு சிறிய காட்சிக்கு அவர்களிடம் சென்று கேட்பது சரியாக இருக்காது என அதை விட்டுவிட்டேன் என தெரிவித்தார். 


இதில் மேலும் படிக்கவும் :