சிம்பு டோட்டல் கன்ஃப்யூஸ்
சிம்பு டோட்டல் கன்ஃப்யூஸ்
சிம்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலே குழப்பம்தான். சிம்புவின் அலட்சியத்தால் போடா போடி படம் முடிந்து வெளியாக மூன்றரை வருடங்களானது.
வாலு மூன்று வருடங்களை எடுத்துக் கொண்டது. இந்த தாமதத்துக்கு பொறுப்பேற்று அந்தப் படங்களை வெளியிட்டதில் பல கோடிகள் டி.ராஜேந்தருக்கு நஷ்டம்.
இருந்தும், சிம்பு திருந்தியதாக இல்லை என்பது போன்றே செய்திகள் வருகின்றன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படப்பிடிப்பு சிம்புவால் தாமதமாவதாகவும், ஆதிக் ரவிச்சந்திரன் இந்த ட்ரிபிள் ஏ படத்தைவிட்டு ஜீ.வி.பிரகாஷை வைத்து வெர்ஜின் மாப்ளே படத்தை இயக்கவிருப்பதாகவும் பேச்சு. ஆனால், நிலைமை அந்தளவுக்கு கைமீறிவிடவில்லை.
யுவனுடன் உட்கார்ந்து படத்துக்கான ஒன்பது பாடல்களையும் முடித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். ஆமாம், படத்தில் ஒன்பது பாடல்களாம். நாயகிகள் தேர்வு முடிந்ததும் படப்பிடிப்பு முழுவேகத்தில் தொடங்குமாம்.
இந்தப் படத்தில் சிம்பு மூன்றுவித கெட்டப்புகளில் வருகிறார்.