ஹன்சிகாப் படத்தில் சிம்பு – பின்னணி என்ன ?
ஹன்சிகா நடிப்பில் உருவாகும் அவரது 50 ஆவது படமான மஹாவில் சிம்பு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
சிம்புவோடுக் காதலில் இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் கிசுகிசுக்களில் சிக்கியவர் ஹன்சிகா. தமிழ் சினிமாவில் பிரபலமானக் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் சிம்புவைக் காதலித்தால் உன் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்ற அறிவுரைகளைக் கேட்டு சிம்புவைப் பிரிந்தார். ஆனால் அதன் பிறகும் அவரது சினிமா வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.
பிரபலக் கதாநாயகர்களோடு எல்லாம் ஜோடிப் போட்டு தமிழ் சினிமாவை ஒரு சுற்று வந்த ஹன்சிகாக் கையில் இருப்பது ஒரு சிலப் படங்களே. அதில் அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் மஹா படமும் ஒன்று. சமீபத்தில் இதன் போஸ்டர்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் இப்போது இந்தப் படத்தைப் பற்றிய மேலுமொருப் பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க சிம்பு ஒத்துக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிக்க 7 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். பிளாஷ் பேக் காட்சியில் வலம்வரவுள்ள சிம்பு ஒரு பாடலுக்கு நடனம் ஆடவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
காதல் கிசுகிசுகளுக்குப் பிறகு சிம்புவும் ஹன்சிகாவும் நடிக்க இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.