1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2016 (10:48 IST)

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள சிம்பு!!

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள சிம்பு!!

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் ரீதியில் சாதனையை படைத்தவரும் ரெமோ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 


 
 
இப்படத்தின் படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா பற்றி பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். மேலும் படம் வெளியாக விடாமல் பலரும் இடையூறு செய்ததாகவும், தொல்லை கொடுத்ததாகவும் மேடையில் பேசினார். உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, தயது செய்து தொல்லை கொடுக்காதீர்கள், என்னை வேலை செய்யவிடுங்கள் என்று பேசினார்.
 
இதனை தொடர்ந்து இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் “கவலைப்படாதே சிவா. உனக்கு மட்டுமல்ல, எனக்கும் தெரியும் யார் பின்னால் இருக்கிறார்கள் என்று. அதனால் தான் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். கடின உழைப்பு தான் பலன் தரும். மற்றவற்றை கடவுளிடம் விட்டுவிடு”, என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.