செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 மார்ச் 2021 (15:49 IST)

மீண்டும் தியேட்டரில் ரிலீஸாகும் சிம்பு படம்!

சிம்பு மற்றும் ஜோதிகா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் திரைப்படம் மீண்டும் திரையரங்கில் வெளியாக உள்ளது.

சிம்புவின் சினிமா வாழ்க்கையில் முதல் ஹிட் படமாக அமைந்தது மன்மதன் திரைப்படம்தான். அந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தது மட்டுமில்லாமல் திரைக்கதை மற்றும் இயக்கம் ஆகியவற்றிலும் அவர் பங்கெடுத்தார். ஜோதிகா, கவுண்டமணி மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த படம் டிஜிட்டலில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் ரிலீஸாக உள்ளதாம். கொரோனா லாக்டவுனால் திரையரங்குக்குக் கூட்டம் வருவதில்லை என்பதால் இதுபோல ஹிட் ஆன படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.