வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2017 (18:06 IST)

சிம்பு இசையில் பாடும் டிஆர், குறளரசன்

சிம்பு இசையமைக்கும் படத்தில் அவரது அப்பா டி.ஆர்., தம்பி குறளரசன் ஆகியோர் தலா ஒரு பாடல் பாடுகின்றனர்.

 
சந்தானம் நடித்துவரும், சக்கைப்போடு போடு ராஜா படத்துக்கு சிம்பு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஆரம்பத்தில் வருகிற கலக்குற மச்சான் கலக்குற எனத்தொடங்கும் பாடலை சிம்பு கேட்டுக் கொண்டதற்கிணங்க அனிருத் பாடினார்.
 
படத்தில் இடம்பெறும் திருவிழா பாடல் ஒன்றை டிஆரும், காதல் பாடல் ஒன்றை சிம்புவின் தம்பி குறளரசனும் பாட உள்ளனர். குறளரசன் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்துக்கு இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.