சிம்பு இசையில் பாடகராக அறிமுகமாகும் உன்னிகிருஷ்ணன் மகன்
நடிகர் சிம்பு இசையமைப்பில், பிரபல பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணன் மகன் பாடகராக அறிமுகமாகிறார்.
கேரளாவைச் சேர்ந்த பாடகரான உன்னிகிருஷ்ணன், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அவருடைய மகளான உத்ரா உன்னிகிருஷ்ணன், ‘சைவம்’ படத்தில் இடம்பெற்ற ‘அழகே… அழகே…’ பாடலைப் பாடி பாடகியாக அறிமுகமானார். அந்தப் பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றார்.
தற்போது உன்னிகிருஷ்ணன் மகனான வாசுதேவ் கிருஷ்ணன், ‘சக்கபோடு போடு ராஜா’ படத்திற்காக சிம்பு இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், லியோன் ஜேம்ஸ், டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் ஆகியோரும் பாடியிருக்கின்றனர்.
20 வயதான வாசுதேவ் கிருஷ்ணன், கிரிக்கெட்டிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் உறுப்பினராக இருக்கிறார்.