1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (12:19 IST)

மாநாடு சிங்கிள் பாடல் எப்போது? யுவன்ஷஙகர் ராஜா டுவிட்!

சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் இறந்ததால் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 
 
அதன் பின்னர் ஊரடங்கு காரணமாக மக்கள் அவதிப்பட்டு கொண்டு இருப்பதால் இந்த நேரத்தில் சிங்கிள் பாடலை வெளியிட விரும்பவில்லை என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதனால் இந்த பாடல் எப்போது வெளிவரும் என்று தெரியாமல் சிம்பு ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் மிக விரைவில் மாநாடு படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒப்புக்கொண்டுள்ளார் என்பதால் இன்னும் ஒரு சில நாட்களில் மாநாடு படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது