கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட மாநாடு: அதிர்ச்சியில் சிம்பு ரசிகர்கள்
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் நாளை ரிலீஸாக இருந்த நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மாநாடு திரைப்படம் ஏற்கனவே தீபாவளி தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது என்பதும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்