வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 12 மே 2021 (17:55 IST)

கே.வி.ஆனந்தின் ‘கோ’ படத்தில் சிம்பு: வைரலாகும் புகைப்படங்கள்!

கொரோனா பாதிப்பு காரணமாக சமீபத்தில் காலமான கேவி ஆனந்த் இயக்கிய திரைப்படங்களில் ஒன்று ’கோ’. ஜீவா, கார்த்திகா நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த திரைப்படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒருசில காட்சிகளும் படமாக்கப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் சிம்பு அந்த படத்தில் விலகியதை அடுத்து ஜீவா இந்த படத்தில் இணைந்தார்.
 
இந்த நிலையில் சமீபத்தில் கேவி ஆனந்த் அவர்களுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டு இந்த சிம்பு ‘கோ’ படத்தை மிஸ் செய்தது தனக்கு வருத்தமானது என்றும் ஆனால் கண்டிப்பாக விரைவில் அவருடன் பணிபுரிந்த திட்டமிட்டிருந்தேன் என்றும் ஆனால் அவர் மறைந்துவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் ‘கோ’ படத்தில் சிம்பு பணியாற்றிய போது எடுக்கப்பட்ட ஸ்டில்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஸ்டில்களை பார்க்கும் போது சிம்பு ஒரு நல்ல படத்தை மிஸ் செய்து விட்டார் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது