வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 26 ஜூன் 2024 (14:01 IST)

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்க்கு நிதியுதவி செய்த நடிகர் சிம்பு! எத்தனை லட்சம் தெரியுமா?

நடிகர் வடிவேலுவுடன் பல திரைப்படங்கள் நடித்த நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு சிகிச்சைக்கு பணம் இல்லை என்பதால் அவர் வீட்டிலேயே தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தனக்கு சினிமா கலைஞர்கள் நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் வீடியோ ஒன்றின் மூலம் உருக்கமான வேண்டுகோள் எடுத்து இருந்தார். 
 
வடிவேலுவுடன் அவர் பல திரைப்படங்களை நடித்துள்ளதால் வடிவேலு அவருக்கு உதவி செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் நடிகர் சிம்பு வெங்கல் ராவ் சிகிச்சைக்காக இரண்டு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதனை எடுத்து வெங்கல் ராவ் நடிகர் சிம்புவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து மேலும் சில நடிகர்கள் வெங்கல் ராவ் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவரது உடல்நிலை முழு அளவில் குணமாக சிறப்பான சிகிச்சை அளிக்க தாராளமாக உதவி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
Edited by Mahendran