ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2021 (16:39 IST)

முற்பகல் செய்தது பிறபகல் விளையுது… ஈஸ்வரனுக்கு தடை கோரும் முன்னாள் தயாரிப்பாளர்கள்!

நடிகர் சிம்புவை வைத்து படம் தயாரித்து நஷ்டமான தயாரிப்பாளர்கள் ஈஸ்வரன் படத்துக்கு தடை விதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பொங்கலை முன்னிட்டு ஈஸ்வரன் மற்றும் மாஸ்டர் திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிப்பு வெளியானது. இதற்காக 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவால் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேட்டியளித்து திரைப்பட விநியோகஸ்தரும், சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் “என் மகனின் ஈஸ்வரன் படம் வெளியாக வேண்டும். இது முன்னமே திட்டமிட்டது. ஆனால் மாஸ்டர் படத்திற்காக பலர் ஈஸ்வரனுக்கு எதிராக சதி செய்கிறார்கள். AAA பட நஷ்டத்திற்காக மனநஷ்ட ஈடு கேட்டு கட்ட பஞ்சாயத்து செய்கிறார்கள்” என வேதனை தெரிவித்துள்ளார்.

ஆனால் ஈஸ்வரனுக்கு தடைக்குப் பின்னால் வேறு சில காரணங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது என்னவென்றால் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு சிம்பு பதில் சொல்லவேண்டும் என்று ஒரு புகார் கொடுத்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் கொரில்லா படத்தின் தயாரிப்பாளரிடம் அடவான்ஸ் வாங்கிவிட்டு சிம்பு படம் நடிக்காமல் போக்குக் காட்டியதால் அவரும் புகார் கொடுத்துள்ளாராம். இந்த பிரச்சனைகள் எல்லாம் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் வந்து நிற்கிறதாம். இந்த இரண்டு பிரச்சனைகளையும் முடித்தால்தான் ஈஸ்வரன் ரிலீஸாவது உறுதியாகும் என சொல்லப்படுகிறது.