3 பேர் கடலில் குதித்தே ஆக வேண்டும்: ’புலி’ இயக்குனர் சிம்புதேவனின் ‘போட்’ டீசர்
விஜய் நடித்த புலி என்ற திரைப்படத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்கிய இயக்குனர் சிம்பு தேவன் எட்டு ஆண்டுகள் கழித்து இயக்கி இருக்கும் திரைப்படம் தான் 'போட்'.
இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த டீசரில் கடந்த 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாடு சென்னைக்கு குண்டு போடுகிறது.
அப்போது உயிர் பிழைக்க பத்து பேர் ஒரு படகில் ஏறி வங்காள விரிகுடா கடலுக்குள் செல்கின்றனர். அப்போது அந்த படகில் திடீரென விரிசல் ஏற்படுகிறது. அந்த 10 பேரில் மூன்று பேர் கடலில் விழ வேண்டும், இல்லாவிட்டால் அனைவரும் செத்து விடுவோம் என்று யோகி பாபு கூற அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் விறுவிறுப்பான காட்சிகள் ஆகும்.
சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் யோகி பாபு, கௌரி கிஷான், எம் எஸ் பாஸ்கர், சின்ன ஜெயந்த், மதுமிதா, லீலா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகிய இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது