திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 8 நவம்பர் 2020 (12:58 IST)

ஈஸ்வரன் படத்தின் டப்பிங்-ஐ ஜெட் வேகத்தில் முடித்த சிம்பு ! ரசிகர்கள் ஆச்சர்யம்

நடிகர் சிம்பு தற்போது ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்துள்ளார். சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை நவம்பர் 6 ஆம் தேதியுடன் வெறும் 40 நாட்களில் முடித்துள்ளனர் படக்குழுவினர். இந்நிலையில் இப்படத்தின் டப்பிங்கை ஜெட் வேகத்தில் முடித்துள்ளதாக சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது அனைவருக்கும் பெரும் ஆச்சர்யம் ஏற்படுத்தினாலும்  சினிமா ஆரோக்கியமான வழியில் செல்வதாகப் பலரும் படக்குழுவைப் பாராட்டியுள்ளனர்.

ஏற்கனவே திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள இடங்களில் ஈஸ்வரன் பட ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் பணியாற்றிய சுமார் 400 பேருக்கு சிம்பு ஒரு கிராம் தங்கம் மற்றும் வேஷ்டி, சீலை வழங்கி தீபாவளி பரிசளித்துள்ளார்.
 
மேலும், இப்படத்தில் நடித்துள்ள 200 பேருக்கு சேலை,வேஷ்டிகள், இனிப்புகள் வழங்கி தனது அன்பை தெரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணியை இரண்டு நாட்களில் முடித்துள்ளார் சிம்பு. இது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவர். அவரது ரசிகர்கள் சிம்புவை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

ஒஸ்தி படத்துகு இசையமைத்த தமன் இசையில், திரு –ஒளிப்பதிவில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். இப்படத்தை மாதவ் மீடியா தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.