ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 3 மே 2021 (20:26 IST)

ஜெயலலிதாவுடன் ஸ்டாலினை ஒப்பிட்டு வாழ்த்து தெரிவித்த சித்தார்த்!

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு நடிகர் சித்தார்த் டுவிட்ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் என்றும் அவர் நல்லாட்சியை தருவார் என்று தான் நம்புவதாகவும் சிறப்பாக ஆட்சி செய்து தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றுவார் என்றும் சித்தார்த் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
 
இந்த டுவிட்டுக்கு பதில் அளித்த மு க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் சமூக நீதி உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றுவோம் என்றும் நல்லாட்சி தருவோம் என்று முடிவு செய்துள்ளார் 
 
ஜெயலலிதாவை ஒப்பிட்டு நடிகர் சித்தார்த் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக நடிகர் சித்தார்த் டுவிட்டரில் பாஜகவுக்கு எதிராக போர் செய்து வருகிறார் என்பதும் அவருக்கு அதனால் அவருக்கு அச்சுறுத்தல்கள் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது