வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (16:40 IST)

என்னிடம் கருப்புப் பணம் இல்லை… அதனால் பயமும் இல்லை-நடிகர் சித்தார்த்!

நடிகர் சித்தார்த் சமூகவலைதளங்களில் தைரியமாக கருத்துகளைப் பேசுவது குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சித்தார்த் ஷங்கரின் பாய்ஸ் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து இன்று முன்னணி நடிகராக உள்ளார். சமூகவலைதளங்களில் அவர் தைரியமாக மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்.

இதுபற்றி இப்போது ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ‘நான் எப்போதுமே அதிகாரத்துக்கு எதிராகப் பேசி வருகிறேன். விஸ்வரூபம் பிரச்சனையின் போது கமலுக்கு ஆதரவாக அரசை விமர்சித்து பேசினேன். என் 8  வயதில் இருந்தே பேசி வருகிறேன். என்னிடம் கருப்புப் பணம் இல்லை. என்னிடம் பயமும் இல்லை’ எனக் கூறியுள்ளார்.