திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 12 ஆகஸ்ட் 2023 (16:43 IST)

60ஆண்டுகளாக திரையுலகை ஆளும் இணையற்ற பேரரசர் -கமல்ஹாசனை வாழ்த்திய ஸ்ருதிஹாசன்

kamalhaasan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.  இவர், களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

1960 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ஏவிஎம் தயாரித்திருந்தது. இப்படத்தில்  நடித்ததற்காக  அப்போதைய ஜனாதிபதியிடம் தங்கப்பதக்கம் பெற்றார் ஐந்து வயதான கமல்ஹாசன்.

அதன்பின்னர், மாணவன், அரங்கேற்றம், நான் அவனில்லை, மன்மத லீலை, ராஜபார்வை, காக்கிச்சட்டை, இந்தியன்,  விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் பேசும் படம்  மும்பை எக்ஸ்பிரஸ், அன்பே சிவம், ஹேராம் உள்ளிட்ட பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு சாதித்தார் கமல்ஹாசன்.

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் வசூலில் சாதனை படைத்தது. தற்போது அவர் இந்தியன் 2 , கமல்233 ஆகிய படங்களில் நடிப்பதுடன் சில படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில்  தயாரித்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அடியெடுத்து வைத்து 64 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில்,  ‘’ பல ஏற்ற இறக்கங்கள், சவால்களை சந்தித்துள்ளார், அவை எதுவும் உலக நாயகனையும், சினிமாவையும் உயர்த்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை நிறுத்தவில்லை…. சினிமாவை 64 ஆண்டுகளாக ஆளும் இணையற்ற பேரரசர் இன்று 64 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்’’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.