திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2017 (19:14 IST)

வக்கீல் டு ரிப்போர்ட்டர்... கதை செல்லும் ஷ்ரத்தா ஶ்ரீநாத்!!

நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்தார். 
 
கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் வக்கீலாக பணிபுரிந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் சினிமாவில் களமிறங்கிய பிறகு அவரை தேடி நல்ல வாய்ப்புகள்  வந்தன. தற்போது, ரிச்சி படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார். 
 
காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ரிச்சி படத்தில் ரிப்போர்ட்டராக நடித்துள்ளார்.
 
தனது சினிமா பயணம் பற்றி ஷ்ரத்தா கூறியதாவது, தமிழில் நான் கமிட்டான முதல் படம் ரிச்சி. இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படத்தில் நடித்தேன். ஆனால் படம் இப்போதுதான் திரைக்கு வருகிறது. இதற்கு பிறகு நடித்த மூன்று படங்கள் ரிலீசாகி விட்டன. 
 
விக்ரம் வேதா படத்தைப்போன்று ரௌடியிசம் கலந்த கதை பாணியில்தான் இந்த ரிச்சி படமும் தயாராகியிருக்கிறது. இதில் ஒரு ரிப்போர்ட்டராக நடித்திருக்கிறேன். 
 
சில ரௌடிகளை சந்தித்து பேட்டி எடுப்பேன். அப்போது ரௌடியான நிவின் பாலியை சந்திப்பேன். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்த படம் எனக்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என கூறியிருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.