1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (16:37 IST)

இதனால்தான் நண்பா நீங்கள் தளபதி..’ விஜய்க்கு ஷாருக்கான் நன்றி

Shahrukkhan
இதனால் தான் நண்பா நீங்கள் தளபதியாக இருக்கின்றீர்கள் என நடிகர் விஜய்க்கு ஷாருக்கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படத்தின் டிரைலர் இன்று ரிலீஸ் ஆன நிலையில் இந்த டிரைலரை விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 
 
இந்த நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஷாருக்கான் தன் டுவிட்டர் பக்கத்தில் மிக்க நன்றி நண்பா, இதனால்தான் நீங்கள் தளபதியாக இருக்கின்றீர்கள். கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று வெளியான பதான் திரைப்படத்தின் டிரைலர் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதை அடுத்து ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் படம் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran