செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 10 ஜூலை 2023 (16:04 IST)

''ஷாருக்கான் அழகில்லாதவர்...நடிக்கவும் தெரியாது'' - பிரபல நடிகை விமர்சனம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை பிரபல பாகிஸ்தான் நடிகை மஹ்னூர் பலூச் கடுமையான விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் பாட்ஷா, கிங் கான் என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் படம் பாலிவுட்டில் புதிய வசூல் சாதனை படைத்தது.

எனவே, அட்லீ  இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜவான். இப்படம் விரைவில்  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளளது.

இந்த நிலையில்,  சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை பாகிஸ்தான் நடிகை மஹ்னூர் பலூச் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில், ‘’ஷாருக்கான் அழகான நபரில்லை. ஒரு ஆணை பிடிப்பதற்கு அவரது தோற்றம் மட்டுமே போதாது. அவரது செயல், பண்பு உள்ளிட்ட குணன்களும் மிக முக்கியம் எனவும், ஷாருக்கானுக்கு இயல்பான ஒரு ஆணுக்குரிய தோற்ற அழகில்லை என்று தெரிவித்துள்ளார்.
mahnoorbaloch

மேலும், ஷாருக்கான் ஒரு நல்ல தொழிலதிபர்.  தனது படங்களை வெற்றி பெற வைப்பது பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளனர், ஆனால், அவர் ஒரு நல்ல நடிகர் அல்ல….இந்தக் கருத்து ஷாருக்கான் ரசிகர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால், என் மனதில் நினைத்ததைக் கூறுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகை மஹ்னூர் பலூச் கருத்திற்கு ஷாருக்கான் ரசிகர்கள் விமர்சனம் கூறி   வருகின்றனர்.