வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (08:12 IST)

ஒரு நாளைக்கு 100 சிகரெட் புகைப்பேன்…. இப்போது நிறுத்திவிட்டேன் – ஷாருக் கான் எடுத்த புது முடிவு!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார். இந்த ஆண்டு அவர் படம் எதுவும் ரிலீஸாகாத நிலையில் அடுத்த ஆண்டில் கிங் என்ற படம் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய 59 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை சந்தித்த ஷாருக் கான் ஒரு இனிய செய்தியாக “நான் புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்டேன். அதை நிறுத்திய பிறகு மூச்சுத் திணறல் பிரச்சனை நின்றுவிடுமென நினைத்தேன். ஆனாலும் இன்னும் அந்த உணர்வு உள்ளது. கடவுள் ஆசியால் அதுவும் விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சிகரெட் பழக்கம் குறித்து பேசிய ஷாருக் கான் தான் ஒரு நாளில் 100 சிகரெட் வரைப் புகைப்பதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கிரிக்கெட் மைதானத்திலேயே சிகரெட் பிடித்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.