செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (11:18 IST)

17 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் ஷாருக் கான் & அமிதாப் பச்சன்!

பாலிவுட்டில் முன்னணிக் கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது அடிக்கடி நடக்கும் விஷயம்தான். சூப்பர் ஸ்டார்களான ஷாருக் கான், சல்மான் கான், அமிர்கான், அமிதாப் பச்சன் ஆகியோர் பலமுறை இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது ஷாருக் கான் பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்றில் “அமிதாப் பச்சனுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிப்பது ஜாலியான அனுபவம். ஷூட்டிங்கை முடித்து திரும்பி வந்ததும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன்.” என பகிர்ந்துள்ளார்.

ரசிகர் ஒருவர் அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக் கான் ஆகிய இருவரும் ஓடிவருவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர, அதற்கு பதிலளித்து இவ்வாறு ட்வீட் செய்துள்ளார் ஷாருக் கான்.  ஷாருக் கானின் ஜவான் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தன்னுடைய புதிய படத்தில் அமிதாப் பச்சனோடு நடிப்பதை அவர் உறுதி செய்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.